ராமேஸ்வரம் ஆலயம் தங்கும் விடுதியில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழ் மாணவ, மாணவிகள் 35 பேருடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மீக இடங்களுக்கு சென்று தமிழர்களின் மரபுகளை மாணவர்கள் கண்டறிந்தனர்.