தனுஷ்கோடி கடற்கரையில் தொடர்ந்து கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை சேகரிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜூன். 11) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் சேகரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்