தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த அடிப்படையில் 2025 ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு மாத விழா 01. 01. 2025 முதல் 31. 01. 2025 வரை நடைபெறுகின்றனர். அதனையொட்டி இன்று இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று போக்குவரத்து துறையின் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் 50 ற்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுத்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து பாரதிநகர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரண்மனை, கேணிக்கரை, வெளிப்பட்டினம் வழியாக சென்று இறுதியாக டி. பிளாக் பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் வாகன பேரணியை நிறைவு செய்தனர், இந்த வாகன விழிப்புணர்வு பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முஹம்மது, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா மற்றும் அரசு அலுவலர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனங்கள், புதிய வாகன விற்பனையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.