இளமானூரில் கடந்த மே. 27 அன்று இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.