தங்கச்சிமடத்தில் மத்திய மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமுகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கிராம நிர்வாக அலுவலர் சேவுகன், காப்பீட்டுமையம் அலுவலர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல் நாள் நடைபெற்ற முகாமில் 150க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். ஊராட்சி மன்றம் மற்றும் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த முருகேசன், பாண்டி, ஷியாமுதீன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.