ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை ஒட்டி ரத ஊர்வலம்

77பார்த்தது
இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை ஒட்டி ரத ஊர்வலம் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலய 31 ஆம் ஆண்டு மண்டல பூஜை ஒட்டி மாலை ஐயப்பன் ஆலயத்தில் இருந்த புறப்பட்ட ஐயப்பன் ரத ஊர்வலம் வான வேடிக்கைகளுடன் மண்டபம் முகாம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வந்தடைந்த பின்னர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மண்டபம் முக்கிய வீதிகளின் வழியாக ஐயப்பன் ஆலயம் வந்தடைந்த ஊர்வலத்தை குருசாமி சந்திரன் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தார். பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு ஐயப்ப சாமிமார்கள் தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான ஐயப்ப சாமிமார்கள் மற்றும் பெண் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். மண்டபம் காவல் நிலையம் சார்பாக போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி