ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றிரவு (நவம்பர் 29) முதல் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.