சி. சி. டி. வி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை

54பார்த்தது
ராமநாதபுரம் உள்கோட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 7 இடங்களில் தானியங்கி உயா்தர கண்காணிப்பு கேமராக்களும், 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் 3 நான்கு சக்கர வாகனங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் என 7 வாகனங்களில் ஜி. பி. எஸ். கருவி இணைப்புடன் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த, அனைத்து கேமராக்களின் பதிவுகளை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் திறந்து வைத்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் என். யு. சிவராமன், ஆய்வாளா்கள் பாஸ்கரன், பொன்தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தியது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். ராமேசுவரத்தில் வீடுகள் விடுதிகளாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நகராட்சி நிா்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி