பெருங்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும் சுற்றுலா வேணும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஐடி ஊழியர் மற்றும் 12வயது சிறுமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி
விருத்தாச்சலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா வேனில் 15 பேர் அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளனர்.
சுற்றுலா வேன் உச்சப்புள்ளி அடுத்த நதி பாலம் விளக்கு விளக்கு மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் காரை ஒட்டி வந்த கீழக்கரை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (29) மற்றும்
சுற்றுலா வேனில் வந்த 12 வயது மகாலட்சுமி என்ற சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்