ஆப்பனூர்: இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சென்ற காளைகள்

50பார்த்தது
ஆப்பனூர் அரியநாச்சி அம்மன் 48 ஆம் ஆண்டு மாசா முளைக்கட்டு உற்சவ விழாவை முன்னிட்டு 48ம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: வெற்றி இலக்கை நோக்கி சென்ற காளைகள்:

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே திரு ஆப்பனூர் கிராமத்தில் அருள் பலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அரிய நாச்சியம்மன் 48 ஆம் ஆண்டு மாசா உற்சவ விழாவை இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் 30 இரட்டை மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கடலாடி முதுகுளத்தூர் சாலையில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்திற்கு போக வர 14 கிலோமீட்டர் தூரமும் ,

சின்ன மாட்டிற்கு 12 கிலோ மீட்டர் எல்கையா தூரம் நிர்ணயிக்கப்பட்டு
மாட்டு வண்டி பந்தயப்போட்டி நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை , தேனி, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம், நினைவு பரிசு, சுழற் கோப்பை பரிசாக
வழங்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தை கடலாடி, ஆப்பனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சாலையின் இருபுறமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்கள் மாட்டு வண்டி பந்தயத்தினை கண்டு ரசித்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி