திருவாடான திமுக மத்திய ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை திமுக மத்திய ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான முறையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இந்த பந்தயம் நடுமாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக விறுவிறுப்பாக நடந்தது. நடுமாடு பிரிவில் 15 வண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 24 வண்டிகளும் என மொத்தம் 39 வண்டிகள் கலந்து கொண்டு போட்டியை சூடுபிடிக்கச் செய்தன. இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பரிசுகளை வெல்ல கடுமையாக முயற்சித்தனர். பந்தயம் நடைபெற்ற இடம் பார்வையாளர்களின் ஆரவாரத்தால் நிறைந்திருந்தது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் சாரதிகளுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், திமுக மத்திய ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்