திறப்பு விழாவிற்கு முன் புதர் மண்டிய அரசு அலுவலகம்.!

56பார்த்தது
திறப்பு விழாவிற்கு முன் புதர் மண்டிய அரசு அலுவலகம்.!
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே தொழிலாளர் நலத்துறைக்குரூ. 4 கோடியே 50 லட்சத்தில் புதிய அலுவலகம் கட்டும் பணி முடிந்துள்ளது. கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதால் செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.

ராமநாதபுரம் நகர் வீரபத்திரசுவாமி கோவில் தெருவில் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகம் வாடகை கட்டடத்தில் இட நெருக்கடியில் செயல்படுகிறது. இங்கு முத்திரை ஆய்வாளர், அமலாக்கம், சமூக திட்டம் உள்ளிட்ட அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளன.

நலவாரியத்தில் கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். 2000 ஊழியர்கள் வரை ஓய்வூதியம் பெறுகின்றனர். தினமும் ஏராளமான தொழிலாளர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அலுவலகத்தில் கோப்புகளை வைக்க போதிய இடமின்றி நெருக்கடியான நிலையில் அலுவலர் பணிபுரிகின்றனர். இதையடுத்து பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த ஆண்டு ரூ. 4 கோடியே 50 லட்சத்தில் புதிய அலுவலகம் தரைத்தளம், முதல், இரண்டாம் தளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

தொடர் பராமரிப்பு இல்லாமல் திறப்பு விழாவிற்கு முன்னதாக செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. அவற்றை சுத்தம் செய்து விரைவில் புதிய அலுவலகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி