மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னாள் அமைச்சர்கள் சுப தங்கவேலன் சத்தியமூர்த்தி சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு 500க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.