மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தில், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி கடல் வழி படகு பயணம் விரைவில் துவங்க உள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் படகு தளம் அமைய உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம், வில்லிபுத்தூர் தீர்த்தம், தனுஷ்கோடி பகுதிக்கு கடல் வழி சுற்றுலா படகு சவாரி ஏற்படுத்தப்படுகிறது. படகு தளம், 'டி' வடிவில் 120 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலம், 6 அடி உயரத்தில் அமையவுள்ளது.