ஜல் ஜீவன் திட்டத்தை நிறைவேற்ற பணம் வசூலிப்பு - பாஜகவினர்
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மாநில பாஜக பொதுச் செயலாளர் பால கணபதி, மத்திய பாஜக அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்: மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டம் என திமுகவினர் கூறி வருகின்றனர். மேலும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுதோறும் குடி நீர் இணைப்பு வழங்க திமுக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக புகார் வருகிறது என்றார்