அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் நீதி கோரி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இன்று நடைபெறும் பேரணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து பாஜகவினர் போலீசார் தடையை மீறி கோஷமிட்டவாறு புறப்பட முயன்றனர். இது தொடர்பாக மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் உள்பட 8 பேரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மதுரையில் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட 500 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.