நல்லாசிரியர் விருது வழங்கும் விழா: எம். பி பங்கேற்பு.!

50பார்த்தது
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில், கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாராட்டி கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அக்கட்சியின் சார்பாக, கீழக்கரை சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் பணியாற்றி சிறப்பாக சேவையாற்றி வரும் 74 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டி கெளரவபடுத்தும் விழா நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் 'நவாஸ் கனி' பங்கேற்று சிறப்பித்து தந்தது அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 'கண்ணியமிக்க காயிதே மில்லத்' அவர்களின் நினைவாக தேர்வு செய்யப்பட்ட 74 நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி கலந்துகொண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி