ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்:
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக வின் அவதூறு பிரசாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிரசார நடைபயணம் இன்று நடைபெற்றது, இந்த விழிப்புணர்வு பேரணியானது. ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து துவங்கி வண்டிக்காரத்தெரு, சாலைத் தெரு, அஹ்ரகாரம் வழியாக சென்று அரண்மனையில் நிறைவு செய்து கண்டன உரை நிகழ்த்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் கருமாணிக்கம்
எம். எல். ஏ தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் இதயத்துல்லா,
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா,
தேசிய மீனவர் காங் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாநில செயலாளர் ஆனந்த குமார், நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட மகளிர் காங் தலைவர் ராமலட்சுமி, வட்டாரத்தலைவர்கள் சேகர், சேதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர் தலைவர் கோபி நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.