ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மணல்மேடுகள் குறித்தும், அதனால் சுற்றுச்சூழலுக்கும் கரையோர மீனவ கிராமங்களுக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து அருளகம் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியானது பேய்கரும்பு அப்துல்கலாம் நினைவிடம் அருகே உள்ள சமுதாய கூட கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.