ஆடி திருக்கல்யாணம் கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

81பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திருக்கோவிலில் ஆடித்திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டுகிறது. இதையடுத்து ஆடித்திருக்கல்யாண நிகழ்வானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்நிலையில், இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன்சன்னதியில் எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கன்னியலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியானது 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தங்குவர்

ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் வரும் ஆகஸ்ட் 9-ம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும், ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 1ம் நாள் திருநாள் முதல் 10ம் நாள் வரையிலும் சுவாமி புறப்பாடு ராமநாதசுவாமி கோவிலின் நான்கு ரதவீதிகளில் வீதி உலா காலை‌ மாலை வேளைகளில் வெவ்வேறு தோற்றத்தில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி