ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள பெட்ரோல் பங்கில் தகராறு செய்து உபகரணங்களை உடைத்த இருவரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
வாலாந்தரவை பகுதியில் அகுவா பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக பணிபுரியும் பெரியபட்டினம் நடுத்தெருவை சேர்ந்த முகைதீன் (39), பணியில் இருந்த போது அங்கு வந்த வாலாந்தரவை ராமசாமி மகன் ரூபன் (30), ஆறுமுகம் மகன் முருகன் (32), அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் முரளி (33), ஆகியோர் பெரியபட்டினத்திலிருந்து வந்து இங்கு பெட்ரோல் பங்க் நடத்தி மாமூல் தரவில்லை என மிரட்டினர். மேலும் பங்க்கில் உள்ள உபகரணங்களை சேதப்படுத்தினர்.
முகைதீன் புகாரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ். ஐ. , தினேஷ்பாபு ஆகியோர் ரூபன், முரளியை கைது செய்தனர். முருகனை தேடி வருகின்றனர்.