அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்.!

51பார்த்தது
ராமநாதபுரம் அருகே அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஒன்றிய கழகச் செயலாளர் செல்லத்துரை ஏற்பாட்டில், மாவட்ட கழகச் செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். ஜி. ரத்தினம் உள்பட கட்சி பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட செயலாளர் எம். ஏ. முனியசாமி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள அ. தி. மு. க. வின் அனைத்து அணி செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சித் தொண்டர்களுடன் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி