ராமநாதபுரம், அரண்மனை அருகில் பால ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி அபிஷேகம், ஆராதனைகள் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம், பயம், மன குழப்பம் நீங்க இங்கு வேண்டினால் உடனே நிறைவேறும். சனிப்பெயர்ச்சி காலங்களில் இங்கு அர்ச்சனை செய்தால் தோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.