ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை (ஜூலை 29) தொடங்குகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை திங்கள்கிழமை (ஜூலை 29) தொடங்குகிறது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் சந்நிதி முன் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4-ஆம் தேதியும், தேரோட்டம் 6-ஆம் தேதியும், ஆடித்தவசு 8-ஆம் தேதியும், சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் 9-ஆம் தேதியும், கெந்தமாதன பா்வதம் மண்டகப்படி 14-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.