உள்வாங்கிய ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்.!

50பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் இன்று (ஜூன் 6) காலை திடீரென உள் வாங்கியதால் பாசி படர்ந்த பவள பாறைகள் வெளியில் தெரிந்தன.

இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இவர்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க இயலாமல் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் இன்று காலை திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.இதனால் பாசி படர்ந்த பவள பாறைகள் வெளியில் தெரிந்தன. பாறை பள்ளத்தில் தேங்கி கிடந்த கடல் நீரில் சிற்பிகள், சிறிய மீன் குஞ்சுகள் தத்தளித்தன.

புனித நீராட வந்த பக்தர்கள், கடல்நீர் உள் வாங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மதியம் 12: 00 மணிக்கு மேல் கடல் நீர்மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி