பங்குனி அமாவாசையை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின்னர் கடலில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு அதன் தொடர்ச்சியாக கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.