இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(அக்.01) சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா 09. 10. 2024 அன்று அரசு விழாவாக நடைபெறுவதை
யொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி. அபிலாஷா கெளர், அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.