மண்டபம் அருகே வேதாளை சூடை வலைகுச்சு கடற்கரையில் நின்ற பதிவெண் இல்லாத நாட்டுப்படகில் மண்டபம் சுங்கத்துறையினர் இன்று அதிகாலை சோதனை செய்தனர். அதில் தலா 16 கிலோ வீதம் 5 பண்டல்களில் 80 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து படகை கட்டி இழுத்து சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். கைப்பற்றிய கஞ்சா பண்டல் இலங்கைக்கு கடத்த முயற்சியா? என ராமநாதபுரம் சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்