ராமநாதபுரம் புறநகர் பகுதியில் டெக்கரேஷன் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடோனுக்குள் இருந்த சுமார் ஐந்து கோடி மதிப்பிலான ஏசி, டெக்கரேஷன் பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும், தீ மளமளவென பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறினர். இந்த தீ விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்