இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஐயப்பன் ஆலயத்தில் 31 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கேரளா மாநிலம் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப ஆலயத்தில் மண்டல பூஜை முன்னிட்டு உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் வழிபடும் ஐயப்ப சாமி ஆலயத்தில் மண்டல பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெறும் அதையொட்டி இன்று ராமேஸ்வரம் அருகே மண்டபம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் 31 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா அதி காலை 5 மணி அளவில் குருசாமி சந்திரன் தலைமையில், ராமேஸ்வரம் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய சிவாச்சாரியார் பங்கேற்று மந்திரங்கள் ஓத மாபெரும் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன்பின் ஐயப்பனுக்கு தீபாரதனை காட்டப்பட்டு, மண்டபம் ரயில்வே நிலையம் அருகே உள்ள 18-ம் படி கருப்பணசாமி ஆலயத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்ட பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேட்டை துள்ளல் முக்கிய வீதிகளின் வழியாக ஐயப்பன் ஐயப்பன் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் ஐயப்பனுக்கு மகா தீபம் காட்டப்பட்டு தீபாரனை நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணியளவில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.