மீனவர்களுக்கான 3. 20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

66பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மீனவர்களுக்கான 3. 20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது: -

இலங்கை கடற்படையினரால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டு அங்கு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளின் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள் 7 நாட்டு படகுகளுக்கான மீனவர்களுக்கு 3. 20 கோடி மதிப்பீட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத்சிங் தலைமையிலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர்கள் ஜெய்லானி அப்துல் காதர், கோபிநாத், ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் மீனவர் நலச்சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி