ராமநாதபுரத்தில் தமிழ் தேர்வில் 281 பேர் ஆப்சென்ட்

59பார்த்தது
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் மார்ச் 28ல் துவங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகள், 37 உதவி பெறும் பள்ளிகள், 52 தனியார் பள்ளிகள், 1 மாதிரி பள்ளி என 156 பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 120 பேர், தனித்தேர்வாளர்கள் 458 பேர் என 16412 பேர் விண்ணப்பித்தனர். இதில் தமிழ் தேர்வில் 281 பேர் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்தி