ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 11வது மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது: -
ராமநாதபுரத்திலுள்ள வளர்ச்சித்துறை இல்லத்தின் முன்பு உள்ள ஊரகவளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட சங்க அலுவலகத்தை திறந்து மாநிலத் தலைவர் ரமேஷ் திறந்து வைத்தார். நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் ரமேஷ் தலைமையிலும், மாவட்டதலைவர் விஜயன் முன்னிலையிலும் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநில தலைவர் ரமேஷ் இக்கூட்டத்தின் வாயிலாக ஊராட்சி துறைக்கான ஆணையத்தை மாநில அரசு அமைக்க வலியுறுத்தினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்டார பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.