முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா

50பார்த்தது
ராமநாதபுரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தி. மு. க தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் வடக்கு நகர் கழகச் செயலாளரும் நகர் மன்ற தலைவருமான கார்மேகம் தலைமையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், உணவு பொட்டலங்கள் வழங்கியும், வெடி வெடித்தும் சிறப்பாக முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் நகர் முழுவதும் சிறப்பான முறையில் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான தி. மு. க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி