திருவாடானை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து நீரேற்று நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் உள்ளது. இப்பகுதியில் 950 மேற்பட்ட வீடுகள் உள்ளது. வளர்ச்சி அடைந்து வரும் பகுதியான இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி வந்த நிலையில் ஆத்திரமுற்ற பெண்கள் அங்குள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டனர். பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. இப்பகுதி மக்களுக்கு கூறுகையில் ஆங்காங்கே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சரி செய்தாலே போதுமானதாக இருக்கும் எனவும் கவலை தெரிவித்தனர்.
குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளிடம் இது பற்றி கேட்ட போது விரைக்கு நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.