திருஞான சம்பந்தர் திருமுலைபால் உற்சவம் நடந்தது. வைகாசி விசாக திருவிழா 6ம் நாள் நிகழ்வில்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதன் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாதிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 130 அடி உயர கம்பீரமான காட்சிகளுக்கும் கோபுரம் உள்ள சிவன் ஆலயமான அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் மண்டகப்படியில் திருஞான சம்பந்தர் திருமுலைபால் திருவிளையாடல் நடந்தது.
இந்நிகழ்வில் திருஞானசம்பந்தர் திருவாடானை ஆலயத்திற்கு வந்து 11 பாடல்களை பாடியுள்ளார். அந்த வரலாற்றை கூறி நிகழ்வுகள் நினைவு கூறும் வகையில் நடந்தது. அதனை தொடர்ந்து சமணர்களை கழுவேற்றும் நிகழ்வுகள் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்