ஆர். எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆறு உபரி நீர் வருவதால் கண்மாய் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர். எஸ். மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாய் முழு கொள்ளளவான 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் பெரிய கண்மாயின் கீழ் உள்ள 12, 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்மாய் பருவமழையால் மட்டுமே நிரம்புவது சாத்தியமற்றது. இதனால் பெரிய கண்மாய்க்கு வைகை ஆறு மற்றும் சூரியன் கோட்டை ஆறு மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்காக சில தினங்களுக்கு முன்பு வைகை அணை நீர் திறக்கப்பட்டுள்ளது