லாரியின் பின்புறம் லாரி மோதி டிரைவர் பலி.!

61பார்த்தது
பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் டிரைவர் பலியானார்.

கள்ளியடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் முருகானந்தம் 55. இவர் நேற்று முன்தினம் காலை மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சூர் நோக்கி லாரி ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே திசையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அய்யங்காளை 55, மற்றொரு லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியதில் டிரைவர் அய்யங்காளைக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யங்காளை இறந்தார். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி