கோவை - மதுரை ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோரிக்கை
ராமேஸ்வரம் முதல் மதுரை வரை ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ளதால் அதிகளவு பயணியர் வந்து செல்கின்றனர். மதுரை கோவை இடையே செல்லும் ரயிலில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நூற்றாண்டுக்கு முன் இருந்தது போல் இந்த ரயிலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோவை - மதுரை - ராமேஸ்வரம் ரயிலை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்