பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு.!

71பார்த்தது
பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு.!
பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தாா்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், கீழப்பருத்தியூா் ஊராட்சி புலவா் வேலங்குடி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா், மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்தப் பகுதியில் விவசாயம் முதன்மைத் தொழிலாக இருந்து வருவதால், விவசாயிகளுக்கான வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என வேளாண் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா். மேலும், கிராமப் பகுதிகளுக்கு எளிதாகச் சென்று வரும் வகையில், சாலை வசதிகள், பேருந்து, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இந்தப் பகுதியில் ரூ. 4. 50 லட்சத்தில் நடைபெறும் மயானம் காத்திருப்போா் கூடம் கட்டுமானப் பணியை பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து, பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் உள்ள ஏலக்கூட ஆய்வகம், விவசாயிகளின் ஓய்வறை, கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்ட மிளகாய் வத்தல், நெல், குதிரைவாலி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொடர்புடைய செய்தி