பரமக்குடி ரயில் நிலையத்தை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பு

60பார்த்தது
பரமக்குடி ரயில் நிலையம் ரூ. 10 கோடி வருமானம் ஈட்டிய நிலையில் தொலைதூர ரயில்கள் நிறுத்தம் ஏற்படுத்தாமல் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கிறது என பயணிகள் குற்றம் சாட்டினர். 

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயிலை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் இந்த ரயிலை பரமக்குடி ஸ்டேஷனில் நிறுத்த வேண்டி பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பு ரயில் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையிலும் பரமக்குடி ஸ்டேஷனில் நிறுத்தம் கொடுக்காமல் சிவகங்கைக்கு மட்டும் வழங்கி உள்ளது. கடந்த ஆண்டுகளில் வருமானத்தில் பரமக்குடி ஸ்டேஷன் 10 கோடி ரூபாயை கடந்துள்ளது. ரூ. 4 கோடி மட்டும் வருவாய் உள்ள சிவகங்கைக்கு நிறுத்தம் வழங்கி உள்ளனர். 

இதே போல் செகந்திராபாத், ராமேஸ்வரம் ரயிலுக்கும் பரமக்குடியில் நிறுத்தம் கிடையாது. தொடர்ந்து ரயில்களுக்கு பரமக்குடியில் நிறுத்தம் வழங்கப்படாத சூழலில் போராட்டம் நடத்தப்படும் என ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி