21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா

0பார்த்தது
21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா, ஏராளமானோர் பங்கேற்பு.

சேமனூர் கிராமத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பிறவி எடுப்பு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சேமனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற மருதாருடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆனி திருவிழாவை முன்னிட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று உரத்தூர் மந்தையில் இருந்து 3 கி. மீ. , தொலைவில் உள்ள அம்மன் கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள் குதிரை சிலைகளை சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மருதாருடைய அய்யனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவில் சேமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி