தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
பரமக்குடியில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 2000க்கும் மேற்பட்டோர் கைது:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை அவமதித்து பேசி வரும் கயவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் தியாகி இமானுவேல் சேகரனார் அரசு விழா மற்றும் மணிமண்டபம் கட்டுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த ஆப்பநாடு மறவர் சங்கத்தை தடை செய்யக் கோரியும்
தேவேந்திரகுல வேளாளர் படுகொலை வழக்குகளை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2000ற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்டோரை போலீசார்கள் கைது செய்தனர்.

இதனால் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி