பட்டினம்காத்தன் துணை மின் நிலைய பராமரிப்பால் மின்சாரம் நிறுத்தம்
பட்டினம்காத்தன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, மாவட்ட ஆட்சியர் வளாகம், மருத்துவ கல்லூரி, ஓம் சக்தி நகர், ஆல்வின் ஸ்கூல், கான்சாகிப் தெரு, மெயின் ரோடு, வைகை நகர், அம்மாபூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 12 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் (பொ) சுதாகர் தெரிவித்தார்