பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு த. வெ. க மாவட்ட தலைவர்

78பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று பெரியார் நினைவு நாளை முன்னிட்டு தா. வெ. க மாவட்ட தலைவர் மலர்விழிஜெயபாலன் தலைமையில்  பல கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து கலந்து கொண்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    அதன் பின்னர் திருவாடானை அண்ணா நகர் பகுதியில் மணிமுத்தாறு கிளை ஆற்றின் கரையோரத்தில் வெள்ளநீர் புகுந்த  பாதிப்புக்குள்ளான வீடுகளையும், மக்களையும் மாவட்ட தலைவர் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் சென்று நேரில் பார்வைக்கு ஆறுதல் கூறிய அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்கள். உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில் ஒவ்வொரு மழைக்காலம் வரும் பொழுது  இதுபோல் ஆபத்தை சந்திக்க வேண்டி உள்ளது. மழை பெய்து 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், மணிமுத்தாறு கால்வாயை தூர்வார வேண்டும், தண்ணீர் புகாதவாறு தடுப்பு சுவர் கட்டித் தர கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுவரை எந்த கட்சியினரும் எந்த அதிகாரிகளும் வந்து தங்களை சந்திக்கவில்லை பாவைக்கு விநாயகர் மட்டும் வந்து சந்தித்தது சற்று ஆறுதலாக உள்ளது என தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி