பரமக்குடியில் நவராத்திரி விழா.!

82பார்த்தது
பரமக்குடியில் நவராத்திரி விழா.!
பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் அம்மன் கோயிலில் வராகி அம்மன் நவராத்திரி விழா நடந்தது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் சொர்ண வராஹி அம்மனுக்கு ஜூலை 6 முதல் ஆஷாட நவராத்திரி விழா துவங்கி நடக்கிறது.

முதல் நாள் அம்மன் வராஹி அலங்காரம், இரண்டாம் நாள் சந்தன காப்பு, தொடர்ந்து மூன்றாம் நாளில் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் இரவு 8: 00 மணிக்கு மகா தீபாராதனையில் ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏற்பாடுகளை சப்தேழுபெரிய கன்னிமார் அம்மன் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி