ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா

53பார்த்தது
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா இரு நாட்கள் கோலாகலமாக நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பது போல இங்கும் விமரிசையாக விழா நடக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் வல்லபை ஐயப்பன் சன்னதி முன்புறமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் மண்டல பூஜை விழா ஆரம்பமானது.
அதிகாலை 4: 00 மணிக்கு கோ பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. ரெகுநாதபுரம் முத்துநாச்சி அம்மன் கோயிலில் இருந்து திரண்ட ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் பல வண்ணப் பொடிகளை பூசி, மேள தாளங்கள் முழங்க நடனமாடியவாறு பேட்டை துள்ளியபடி வந்தனர்.
நாட்டிய குதிரைகள் மற்றும் அலங்கார நடனங்கள் நடந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி