பரமக்குடி அரசு கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு.!

55பார்த்தது
பரமக்குடி அரசு கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு.!
பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு குறித்து சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் வனஜா தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் கோகிலா, நாகராணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க கேலிவதை சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் அநீதிகள் குறித்தும், அதை எதிா்கொள்ளும் சட்ட விழிப்புணா்வுகள் குறித்தும் பேசினா்.
Job Suitcase

Jobs near you