கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15இல் நடைபெறும் என யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார். மார்ச் 14 மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜெபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, இரவு தேர்ப்பவனி நடைபெறுள்ளது. மார்ச் 15 காலை 7:30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப்பிரார்த்தனை, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.