பரமக்குடியில் இடைவிடாத கனமழை

3780பார்த்தது
தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நேற்று இடைவிடாத கனமழை கொட்டியது.

பரமக்குடி நகர் பார்த்திபனூர் கமுதகுடி அரியநேந்தல் மஞ்சள் பட்டினம் வளையனேந்தல் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் கருமேகம் இருள் சூழ இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி